Sunday, March 29, 2009

என்றும் 16

சினிமா பைத்தியம் எப்போதும் உண்டு. சினிமா எடுக்கும் பைத்தியம். அதற்கான கதையை வழக்கம் போல் ஒரு நள்ளிரவில் யோசித்தது. ஒரு வாழ்க்கை பிரயாணத்தை அடிப்படையாக கொண்ட கதை என்பதை தவிர மற்றதெல்லாம் அக்கணம் யோசித்தது மட்டுமே. யாருக்காவது புரிந்தால் படம் எடுக்க கிளம்பலாம். I wrote something brief in english and encapsuled the scenarios in tamil.

A man in search of his identity
தன்னை தானறிய
தடங்களிடை
தேடுவான்

Quest for identification
வானுயர் வேள்விகள்
வளர்த்தேனும்
வந்த பயனறிய
வேண்டுவான்

Man under constant pressure to prove himself
பிறவிதோறும் பிறர்
போற்றிட வேண்டி
பூண்ட வேடமோ
வாழ்க்கை


இதில் நித்தம்
இவன் தொலைத்தது
இவனையன்றோ


need a break
பாவம் ஏதுமில்லை
பயன் தேவையில்லை
பறக்கவே புறப்படுகிறேன்


composing to have left for good
வெட்டுக்கிளியாகிடினும்
வெட்டவிளிதனில் வரையின்றி
வாழ்ந்திட்டலென்ன


No difference of all purpose and no purpose
உலகாள வாழ்வதும்
உலகு இல் வாழ்வதும்
உபத்திரவமே


understanding purity of purpose
ஒரு பூ
பூத்தாயின்
புவிபெறும் புதுவாசம்


real purpose
திருந்திவிட்டேன்
திரும்பிவிட்டேன்
தந்துவிட்டேன்


realtionship
தொடுவானமாய்
தொல்லை தரும்
தூரத் துயர் நீ



revolt
நிச்சயமாய்
நீ தான்
நான்


reality
நதிநீர்
நாற்றமெடுக்கும்
நகர வில்லை என்றால்



realisation
கானல் நீரதை
கனவென்றாலும்
கண்டறிய காதல் வேண்டும்


ranting
புரியாததெல்லாம்
பிதற்றி புனிதனாயிடின்
பிறந்தோம் எதற்கு?


purpose purity oxymoron
பயனின்றி
பயணித்தேன்
பரவசங்களுடனே


journey
சிறு பயனங்களின்
முற்றங்களில் தொடங்கும்
பிறிதொரு பயணம்


life:war not battle
போராட்டமே வாழ்க்கை
உன்னையறிந்தால்
எதிரி அறிவாய்.



ps:title of post is title of movie

2 comments:

Unknown said...

Machii...I really impressed with your tamil poems....I had read some bits of it some time ago and you're really getting better. This one is cool! Keep up the good work! :-)

Ashok Rajan said...

Padam edukalaam thaan!
Producer???