தமிழ்நாட்டில் குடி தண்ணீர் முதல் கலவரங்கள் வரையிலான அனைத்துப் பிரச்சினையும் தீரும் நேரம் அனைவருக்கும் சந்தோசம் தரும் காலம். ஒருவரை தவிர. ஞானி. ஏனென்றால் அப்பொழுது அவருக்கு குறை கூற எதுவும் இராது. என்னுடைய பயம் எல்லாம் அப்படி ஒரு காலம் வரவே போவதில்லை என்பது தான். தமிழோடு சிறு தொடுதளிலேனும் இருக்க வேண்டி அவ்வப்போது படிக்க முனைவது ஆனந்த விகடன் மற்றும் சில தமிழ் பத்திரிகைகளை. ஒரு கட்டத்தில் தவறாது இருந்த பழக்கம் நாளடைவில் நலிந்து போனது உண்மையே. அதற்கு முழு பொருப்புடையன் நானே. உண்மை தமிழை தேடாது குப்பை தொட்டியில் கிளறி கொண்டிருந்தேன். இன்றளவும் முழுமையாக திருந்திவிட வில்லை. அவ்வகையில் ஒரு மாற்றமாய் திகழ்ந்தன சில தமிழ் வலைப்பூக்கள். அதில் ஒன்று இந்த சாநி யினுடையது. கருத்துக்கள் ஒவ்வதிருப்பினும் நான் தேடும் தமிழ் அங்கே இருப்பதன் பொருட்டு அவ்வலைப்பூக்களை தொடர்ந்தேன் . ஞானி யை ஆ.வி யில் தொடர்ந்து வாசித்தது கூட அதனடிப்படையிலே தான். ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் இவர்களை மிகுந்த கருத்து வேறுப்பாட்டினால் புறக்கணிக்க செய்தேன். ஆனால் அண்மையில் அவர்கள் நான் தீவிரம் காட்ட முயலும் இருவேறு visayangaL பற்றி எழுதியதை படிக்க வேண்டியதாயிற்று. ஏனெனில் தீவிரமாய் இருப்பின் தேடுதல் நிறைய இருக்க வேண்டியாகிறது. அதனால் எட்டுத்திக்கும் அவைகள் பற்றி எழும் பல்வேறு செய்திகளை படிக்க வேண்டியிருக்கிறது. எனினும் அவற்றையெல்லாமே ஊடகங்களுக்கான எனது ஐயப்பார்வையுடனே எதிர்கொள்வேன்.
அதில் ஒன்று இளையராஜா. சமீபத்தில் வந்த நான் கடவுள், ரஹ்மானுக்கான் ஆஸ்கார் என இருவேறு களங்களில் அதிகம் விவாதிக்கப்பட்டவர். இன்னும் சொல்ல போனால் எப்பொழுதுமே அதிகமாய் விவாதிக்கப்படும் விசயங்களில் ஒன்று இளையராஜா. ரஹ்மானுக்கு ஆஸ்கார் கிடைத்தது ஒரு பரவச நிகழ்வு என்பது எள்ளளவும் ஐயமில்லை. ஒரு இந்தியன் ஆஸ்கார் விருது பெறுவது என்பது ஒரு அமானுஷ்ய செயல் அல்ல என நிரூபித்தார் அவர். இன்னும் சொல்ல போனால் ஆஸ்கர் பற்றிய மாயயை உடைத்தெரிந்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். இனி நம் கலைஞர்கள் அதை ஒரு தொடுவான இலக்காக கருதி அதை அடைய எத்தனித்து அதிமேதாவி படங்களை எடுக்காமல் நல்ல படங்களை எடுக்க முயற்சி செய்வார்கள். ஆனால் இந்த அதிமேதவிகளோ இந்த சூழ்நிலையை இளையராஜா என்ற தனி மனிதன் மீது வன்மம் வீச உபயோகப்படுத்தியுள்ளனர் தங்களின் எழுத்துக்கள் மூலம். சாநி முதலில் அவரது நான் கடவுள் இசையை மட்டுமே விமர்சித்தார். அதை கூட நான் தனி நபர் இகழ்வாகவே கருதுகிறேன். ஒருவர் கலை மீது வைக்கப்படும் கேணத்தனமான கடும் விமர்சனம் அக்கலைஞர் மீதான் வன்மத்தின் மூலமே வரும். அரசியலில் அதை பரவலாக பார்க்கலாம். அங்கே எழும் விமரிசனங்கள் எல்லாமே தனி மனிதன் சார்ந்தவையே. அது போல் சாநி நான் கடவுளின் இசை கரகாட்டக்காரன் தரத்திற்கு இருப்பதாகவும், அதுவே ஒரு உலக தரமான ஒரு படத்தை தரம் தாழ்த்தியுள்ளது என்கிறார். இந்த விமரிசனத்தில் கடும் முரண் ஒன்றுள்ளது. அவர் இப்படத்தின் இயக்குனரை, அவரது கருத்துக்களை சிலாகித்து எழுதியுள்ளார். இசை மட்டும் இவர் எடுத்துக்காட்டும் சில பிற இசை நிகழ்வுகளை போலிருந்திருந்தால் இது ஒரு உலகத்தரமான படமாய் அமைந்திருக்கும் என்று உளறுகிறார். இவர் சிலாகித்த உலகத்தரமான படம் கொடுக்க வல்ல இயக்குனரே இளையராஜா தான் தன் படைப்பை முழுமை அடைய செய்வதாய் கூறி அதில் அதிமித நம்பிக்கையும் உள்ளவர். ஆனால் நம்ம சாநி சொல்வதோ இயக்குனரின் ஆதாரம் அர்த்தமற்றது எனினும் படைப்பு சிறந்தது என்கிறார். மற்றொன்று அவர் குறிப்பிடும் கரகாட்டக்காரன் தரம். அப்படி ஒரு தரமே கிடையாது. தரமானது தரமற்றது என்று இரு பிரிவினை மட்டுமே உளளது. அந்த வகையில் கரகாட்டக்காரன் பட இசை அந்த படத்திற்கு அமைந்த மிகப்பெரிய தரக்கூடுதல் ஆகும் . இங்கே ஒரு துணை விசயம். கரகாட்டக்காரன் இசையை பொறுத்த வரைக்கும் மாங்குயிலே மற்றும் அந்த நகைச்சுவை கோர்ப்பு இசையையும் தாண்டி சிறந்தது அப்படத்தில் வரும் பாட்டாலே புத்தி சொன்னார் என்னும் அருமையான பாடல். இது வரை அதை முழுமையாக அனுபவித்திருக்க மாட்டீர். தயவு கூர்ந்து ஒரு அமைதி சூழலில் அதை கேட்டுப்பாருங்கள். ஆக சாநி வைக்கும் தரம் சார்ந்த வாதமும் குப்பையே. காழ்ப்புணர்வுடையவே. அவர் மேலும் காசி போன்ற ஒரு அசாதரண சூழலுக்கும் அவரால் ரொமான்டிக்காக தான் இசை தர முடிகிறது என்கிறார். நான் எல்லாம் சரியாக இயங்கும் ஒரு வாலிபன். அப்படத்தை பார்க்கும் போது எனக்கு எழுந்து சல்சா ஆட்டமோ, இல்லை கனவுக் காதலியை அங்கே அழைத்து சென்று ஆசை முத்தமிட வேண்டும் என்றோ தோன்றவில்லை. அவ்விசையை தனியாக கேட்கும் பொது கூட அவ்வண்ணம் தோன்றவில்லை.மற்றும் பிச்சை பாத்திரம் பாட்டு அம்பானிகள் அருள் வேண்டி பாடுவது போலுள்ளது என்றும் பிச்சைக்காரர்கள் நிலையினின்று பாடுவது போலில்லை என்கிறார். இங்கே எடுக்கப்படுவது அருட்பிச்சை. இளையராஜா ஒரு நடுநிசியில் தூக்கமற்று எழுந்து இயற்றிய பாடல் என்கிறார் அதனை. அங்கே அக்கணம் அவர் எடுத்தது அருட்பிச்சை. அந்த அருட்பிச்சை ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு வகையாய் பெற முயற்சி செய்வதுண்டு. அந்த பிச்சைக்கு இலக்கு ஒரு சிறு பொருளாசை முதற் முக்தி அடைமை வரை பல வகைப்படும். ஆக அங்கே பிச்சைக்கு பாத்திரமேந்தி நிற்பதே உண்மை. பாத்திரத்தின் தரம் பிச்சை இடுபவன் திறம்போருட்டு பகுத்தறிய முடிவது ஆகும். மற்றபடி அம்பானியும் இல்லாதவனும் பிச்சை புகின் ஒரே தரத்தில் தான் செய்ய வேண்டும். அப்படி அமைந்த பாடல் அது. கொஞ்சம் கூட புரிதல் இல்லாமல் எழுதவில்லை அவர். வன்மம் கண்களை ,காதுகளை மறைக்கின்றன.
ஞானி இளையராஜா விற்கு அடக்கம் பத்தாது என்கிறார். தலைக்கணம் உடையவர் என்கிறார். உதாரணமாக வெட்கமில்லாமல் பாடலாசிரியர்களிடம் வேண்டி தன்னை துதிபாடும் பாடல்களை இயற்றிக்கொண்டார். அவர் எடுத்துக்காட்டுவது அக்னி நட்சத்திரம் படத்தில் வரும் ராஜா பாட்டு. அவரிடம் இரண்டு கேள்வி. அந்த பாடல் உங்களுக்கு பிடித்திருந்ததா? அந்த படத்தில் அந்த பாட்டு நிறைவாய் இருந்ததா? இவிரு விசயம் பற்றி எவ்வளவு வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் விவாதிக்கலாம். அது வரை நீங்கள் எழுப்பும் எந்த ஒரு விவரமும் அபத்தமே. இவரது திருவாசக விமரிசனம் தனிக்கதை. அதை மற்றுமொரு களத்தில் விவாதிப்போம்.
இவ்விரு மேதாவிகள் தொட்டேழுதி என்னை சலனமடைய செய்த மற்றொரு விசயம் இலங்கை பிரச்சனை. இவர்கள் இல்லாவிட்டாலும் அது பற்றி எழுத தான் வேண்டும். நான் சில விசயங்களை பற்றி, எழுதுவதால் என்ன ஆகிவிட போகிறது என்று எண்ணி எழுதாமல் விட்டுவிடுவது உண்டு. ஆனால் இந்த ஞானி சாநி போன்றோர் எழுதும் அட்டுழியங்கள் தாங்க முடியாமற் எழுதினேன்.
Tuesday, March 10, 2009
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
yaarappa athu saani?
athu charu nivethitha nu oru writer....somewhere shortly called him chaani..and i used it.....
intha O pakkangal eluthuravan thane ?
Post a Comment