Monday, May 11, 2009

ஆட்டோகிராப்....

எழுத்தில் ஆர்வம் மிகுந்த விட்ட தருணம் முதலே உள்ளக்கிடக்கையை அப்படியே எழுதி விட வேண்டும் என தோன்றும். எனினும் உண்மையை பட்டவர்த்தனமாய் உலகுக்கு சொல்ல இயலாதது ஆணித்தரமாய் தடுத்துவிடும. அதற்கு நானே அமைத்துக் கொண்ட காரணம் உலகம் உண்மையை திரித்து புரிந்து கொண்டுவிடுமேன்பது. ஆனால் சமீபங்களில் உலகு பற்றிய பயங்கள் அற்று போகின்றன. ஏனென்று தெரியவில்லை. உள்ளத்தில் உள்ளதை எழுத தயங்குவதில்லை இப்பொழுதெல்லாம்.

பெண்கள் பல வாறாய் ஆக்கிரமிக்கின்றனர் நம் வாழ்வை. தாய், தங்கை தோழி ஏன் பல உருவகங்களில் அது. மீண்டும் பொக்கிஷ டைரியில் எங்கோ எப்போழ்தோ கிறுக்கியது.

சாப்பிட்டாயா?
பாசமொழுக கேட்கும் தாயிடமும்
பணமிருக்கிறதா? போதுமா?
அக்கறையாய் கரையும் தந்தையிடமும்
டேய், வண்டியை பொதுவா ஓட்டு ,
மரியாதையாய் மிரட்டும் தங்கையிடமும்
பிரச்சனை ஒன்றுமில்லையே ?
நல்வாழ்விற்கு பயப்படும் அண்ணனிடமும்
கூட பகிர்ந்து கொள்ள இயலாத
என்னை கொன்று வதைக்கும்
சிற்சில உணர்வுகளுக்காகவே,
ஏன் முழுமையையும் உன்னிடம் பகிர்ந்திடவே
நீ என்னை காதலிக்க விழைகிறேன்.
காதலிப்பாயா?
காதலி!

இவ்வாறாக மனம் காதலை நாடும் என்றுமே. அவவென்னத்திற்கு நீரூற்றி விடும் வண்ணமாக சில பெண்கள் மனதின் கதவு வரை வந்ததுண்டு. கதவுகள் திறக்காமல் போஎனது ஏனென்று தெரியவில்லை. ஆனால் கதவு வரை வந்து , தட்டி விட்டு சென்ற அந்த சுவடுகள் இனிமை. சுருங்காத சொன்னால் இது எனது ஆட்டோகிராப்.


ஆட்டோகிராப் I


சீர்கேடான வாழ்விலும் தவிர்க்க முடியாத இன்பம் ஒவ்வொரு முறையும் கல்லூரி ஆண்டு விடுமுறைக்கு வீடு வருவது.

வீடு வருவதில் ஒரே வருத்தம் அதற்கு சற்று முன் எழுதியிருக்கும் தேர வழியே இல்லாத பரீட்சை.

மயிரே போச்சு. இன்னும் இரண்டு மாதம் விடுமுறை. அதன் பின்னரே, எனக்கு தெரிந்த தேர்வு முடிவுகள் வரும். அப்படியே வந்தாலும் பாஸ் என்று இது வரை ஒற்றை வார்த்தையில் சொன்னது போலவே சொல்லிவிடலாம். ஏனோ அப்பாவும் சரி அம்மாவும் சரி அதற்கு மேல் கேள்வி கேட்பதே இல்லை.

இந்த முறையும் மங்களூர் மெயில் ஏறி அமர்ந்தாயிற்று. நினைவுகள் நிலையின்றி ஏதேதோ பற்றி திரிந்து கொண்டிருந்தது. மனதை ஒருமுகம் படுத்த முருக கடவுளை போற்றவும், வாழ்த்தவும் அறிந்திருந்த இரு செய்யுள்களை சிரத்தையுடன் சொல்ல முயன்றேன். முருகனை தவிர அனைத்தையும் மனதில் நிறுத்த முடிந்தது.

அதில் பளிச்சென நின்றது நாளை விவேகா வீடு வரை வருவாளா. இல்லை நாம் ஏதேனும் காரணம் சொல்லி அவள் வீட்டிற்கு போகலாமா? இருவரும் இருவர் வீட்டுக்கும் இதற்கு முன்னர் பல முறை அந்நியோனிய முறையில் சரளமாக புழங்கியதுண்டு.

ஆனால் பருவத்தின் மாற்றங்கள் அந்நியோனத்தை அந்நியம் ஆக்கி விடுகிறது.

அவளை பார்க்கும் போதெல்லாம் ஒரு பரவசம் வந்துவிடுகிறது இப்பொழுது.

அவளுக்கு என் மீது எப்போதும் அப்படியே.

சென்ற முறை அன்னியோனத்தின் ஆதாரத்தில் அவளை சந்தித்து அளவளாவி கொண்டிருந்த பொது அருகில் சம்மனங்கால் போட்டு அமர்ந்து " ஏய் இன்னும் ரெண்டு வாரத்தில் +2 பரீட்சைகள் ஆரம்பிக்குது எதுனா டிப்ஸ் குடுப்பா "என்றாள்.

நல்லது சொல்வேன் என்ற அவள் நம்பிக்கையை பாழடிக்காமல் "மேத்ஸ் ல மட்டும் 200 கண்டிப்பா எடுத்திடு . மத்ததெல்லாம் தன்னால நடக்கும்" என்றேன்.

ஆர்வமாய் கேட்டவள் சட்டென முகம் சிறுத்து "உன் அளவுக்கு எனக்கு மூளை இல்ல பா"

"நான் கூட 200 எடுக்க முயற்சி தான் செய்தேன். எடுக்கவில்லை. 198 தான் வந்துச்சு. இருந்தாலும் அதுவும் போதும். நீயும் அப்படியே முயற்சி பண்ணு."

"இல்ல இல்ல அவ்ளோ எல்லாம் எடுக்க முடியாது"

இல்லை உன்னை நீ முதலில் நம்ப வேண்டும் என்று நீதி போதனை எல்லாம் சொல்வதாய் இல்லை நான்.

"எழுதறத எழுது. அதுகேத்த மாரி பார்த்துகலாம். இன்ஜினியரிங் , மெடிக்கல் தவிர எவ்வளவோ சாய்ஸ் இருக்கு " என்றேன்.

சட்டென முகம் மலர்ந்தவளாய் "உங்க காலேஜ் ல அந்த மாதிரி சாய்ஸ் இருக்கா?" என்றாள்.

"நிறைய உண்டு "

"என்ன மாதிரி எல்லாம்?"

"பையோடெக் , ஆர்க்கிடெக்ச்சர், எல்லாம்..."

"பையோடெக் படிச்சா நல்லதா?"

இப்படியாக பேச்சின் போக்கு சென்றது என்னை அறியாமலேயே எனக்குள் எரிச்சலை உண்டுபண்ணிவிட்டது போல.

"முதல் ல வர்ற பரீட்சையை நல்லா எழுது. மத்ததெல்லாம் அப்புறம் பார்க்கலாம் " என்றேன் சற்றே எரிச்சலாக.

சட்டென எழுந்து சமையலறையுள் இருந்த அம்மாவுடன் பேச சென்றாள்.

நான் டிவி ரிமோட்டை குடைய ஆரம்பிதேன்.

ஜோதிகா ஆடிக்கொண்டிருந்த ஆட்டத்திற்கு அடங்கியது என்னுடைய ரிமோட் உடனான ஊடல்.

ஜோதிகா வின் ஆட்டத்தில் குவிந்தது என் முழு கவனமும்.

மின்னலென முன்வந்து நின்றால் விவேகா ஜோதிகாவை மறைத்துக் கொண்டு.

"லூசு நவுரு , பாட்டை பார்க்கணும் "

"பாட்டை கேட்டா போதுமே.அதான் கேட்குதுல்ல"

"தோடா ....நவுரு நவுரு ...ப்ளீஸ் நவுரு ....."

அவள் நகர்ந்து கொண்டே "ஜோதிகா வ தான் பாக்குறேன் னு சொல்லேன்"

"நல்ல இருந்தா பார்க்கறது தான்" என்றேன்.

"இந்த படம் பார்த்துட்டியா ?"

"ம்ம்ம்ம்ம்ம்"

"நிறைய படம் பார்ப்பல்ல?"

"ம்ம்ம்ம்ம்ம்"

"ம்ம்ம்ம்...நானும் சென்னை வரணும் படிக்க"...

நான் டிவி பார்த்துக் கொண்டே இருந்தேன். ஜோதிகா தெரிய வில்லை.

மீண்டும் ஜோதிகா போல் தெரிந்தது. நினைவு திரும்பியவனாய் உணர்ந்து பார்த்த போது ஜோதிகா போல் ஒரு பெண் ரெயிலில் ஏறினாள்.

விவேகா கண் முன் வந்து போனால்.

ரெயில் புறப்பட்டது. வேறு கனவுகளில் மூழ்கி தூங்கி போனேன்.


தொடரும்.......

6 comments:

chandru said...

Vandhaalaa?? Vandhaala?

Naren's said...

kandippaaha vanthaal and those were the most romantic days :-) ....ezhuthalaamnu paartha antheh time and vaathai thaan muttuthu....

Suresh said...

machi...too good !

looking forward to the continuation...

chandru said...

ohhhhhhhhhhhhh!!!
Edho breeze veesiruku.. engaluku onnum theriyaamalae poachu.. (But am guessing one).. and indha weekend vettiyathane irupa.. so continue this..!!!

Ashok Rajan said...

Super da... I wish Tom too writes something like this!

Abirami! Abirami!

Naughtyboy said...

Brilliant