Tuesday, June 30, 2009

ஆட்டோகிராப் ii

வீடு வந்து பல் மட்டும் துலக்கி விட்டு எட்டு இட்லி யும் மூன்று தோசைகளையும் சாப்பிட்டு டி யும் குடித்து விட்டு ஸ்டார் மூவிஸ் இல் ஒரு அட்டுப் படம் பார்த்துக்கொண்டிருக்க்ம்போதே எப்பொழது தூங்கினேன் என்று தெரியவில்லை.

விவேகாவின் சத்தத்திற்கு தான் சற்றே கண்கள் சிமின்டின.

பிரபாவுக்கு தெரியுமா ஆன்டி செய்திஎன்றாள்.

எனக்கே இப்ப தான் நீ சொல்றே, அப்பறோம் எப்படிமா அவனுக்கு தெரியும்.

"சாப்பாட்டுக்கு கூட எந்திரிக்க வேண்டாமா.மணி 3 ஆகுது".

"விடும்மா ஹாஸ்டல் ல என்னத்த தூங்கி இருக்க போறான் .தூங்கட்டும்".

ஹாஸ்டல் களிலும் இது போலவே கண்கள் திறக்க மறுக்கும் பொழுதுகளில் கண்களை ஏமாற்றாமல் தூங்கி கொண்டே இருந்த தருணங்கள் எராலம். இங்கே திறக்க மறுத்த கண்களை திறந்த சிறகதித்துக்கொண்டிருந்த மனது வென்று திறக்க வைத்து. உடனே எழுந்து போனால் அசிங்கமா இருக்கும். கொஞ்சம் நேரம் கழிச்சி போவோம். அரை மணி நேரம் விட்டம் பார்த்துக்கொண்டே இருந்தேன். காலையில் பார்த்த படத்தில் கிளைமாக்ஸ் பார்த்தோமா இல்லையா? அட்லீஸ்ட் 2 பேப்பர் னா தேருவோமா? அவ வந்து எவ்ளோ நேரம் ஆகி இருக்கும்? டக்குனு கிளம்பிடுவாளோ? லைட் ஆ பசிக்குதோ? எல்லாம் யோசித்து முடிக்கையில் 30 நிமிடம் ஓடி விட்டது.

இல்ல ஆன்டி நான் டிவி பார்த்துக்கிட்டு இருக்கேன் நீங்க படுங்க என்றால் விவேகா.

எழுந்து வந்து ஒரு நோட்டம்.

அம்மா "வாப்பா சாப்பிடுவோம்".

"நீயும் சாப்பிடலையா? அடம் பிடிப்பியே சாப்பிட".

"நல்லா கொட்டிகிட்டு ஊர சுத்திகிட்டு இருக்கியா"? இது விவேகாவிடம்.
"
ஆமா...காலேஜ் கண்ஃபர்ம் ஆகிதிச்சு"

"ஹிந்துஸ்தான் காலேஜ் லே பயோ டெக்னாலஜி ஜாய்ன் பண்ணுறேன்"

"உங்க நைனா சீட்டை வாங்கிட்டாரா?".

"ஆமா செப்டம்பர் ல கோர்ஸ் ஸ்டார்ட் ஆகுது."

"சரி நான் மூஞ்சி கழுவிட்டு வரேன்." என்று சட்டை செய்யாதவனாய் நான் திரும்பிய போது ஒரே வண்ணமயமாக தோன்றியது. எல்லம் மனதிற்குள் சிறகடித்துக் கொண்டிருந்த பட்டாம்பூச்சிகளின் வண்ணங்கள்.

பாத்ரூமில் ஏனோ 2 நிமிடம் கண்ணாடியையே பார்த்து கொண்டிருந்துவிட்டேன்.

முகத்தில் ஒரு புன்னகை மறைய மறுத்தது போலவே தோன்றியது.

முகத்தை கழுவிவி்ட்டு மறுபடியும் சீரியஸ் ஆக வெ மூஞ்சி இருப்பதை போல கண்ஃபர்ம் பண்ணிவிட்டு வெளியில் ஹால் வந்தேன்.

"நீங்களும் உக்காருங்க ஆன்டி, நான் பரிமாறுறேன்."

"இல்லம்மா நீ பேசிகிட்டு இரு, நான் அவனுக்கு பரிமாறிகிட்டு உக்கார்றேன்"

"பாசம் ல"

"யாரு இல்லை னா?" என்றாள்

"ஹாஸ்டல் ல தான தங்க போற?வா வா நல்லா கொழுத்துப்போய் இருக்கல்ல. நல்லா வத்தலும் தொத்தலுமா ஆக்குவாங்க வா"

"நீ அப்படி ஆகவே இல்லையே"

"நாங்க வெளியிலயும் வெட்டுவோம்ல"

உங்க பெரியம்மா வீடு அங்க தான இருக்கு. இது அம்மா.

"ஆமா ஆன்டி ஆனா அது ரொம்ப தூரம் போல காலேஜுக்கு."

சாப்பிட்டு முடித்து எழும் போதெ அம்மா, "படுத்துக்கோப்பா,ரெஸ்ட் எடு.நான் லேடிஸ் கிளப் வரை போயிட்டு வந்துடறேன்"

"இல்லை தூக்கம் வராது. நான் அப்படியே ஒரு ரவுண்ட் பசங்கள பார்த்துட்டு வந்துடறென்."

"சேர்ந்துக்குவாங்கப்பா. அந்த ஆடிட்டோரிய படிகளிலயே உட்கார்ந்துக்குவாங்க. அப்படி என்ன தான் இருக்கோ அந்த இடத்துல?" என்று அங்கலாய்த்தாள் விவேகா.

ஒரு வெற்று மௌனம்.

"சரி ஆன்டி நான் கிளம்புறேன்.அம்மகிட்ட நீங்க ரெடி னு சொல்லி வர சொல்லுறேன்"

"சரிம்மா. சாயங்காலம் வா"

"சாயங்காலம் எல்லாம் இப்ப லான் (lawn) ல தான் ஆன்டி இருக்கிறது"

"நீ கிளப்பில இல்ல அந்த ஆடிட்டோரிய படிகள்ல தான இருப்ப பிரபா"

மறுபடியும் மௌனம்.

"பை ஆன்டி.பை பிரபா"

கிளப்புக்கும் ஆடிட்டோரிய படிகளுக்கும் இடையே இருப்பது தான் இந்த லான்.

4 comments:

Hari said...

Ungala prabhaa-nu koopdradha kaekha, "Kattradhu tamizh" Jeeva effect irukku.. :)

Thodarum-nu podala.. Thodarum thaana?

Naren's said...

actual ehe enakku character eh prabakharan nu vekka aasai...so surukki praba nu vechathu thaan...and i cud also feel that katathu tamil effect every time i type that.... :-)

Naren's said...

sorry...kandippa thodarum....

chandru said...

engappa.. romba naala idhuku adutha episode edhum release aagala?
Real love'a thanni oothi valarkavae neram pathaliyaa?