முரண் என்றொரு வார்த்தை உள்ளது தமிழில். எனக்கு மிகவும் பிடித்த ஓர் வார்த்தை. இரவு பகல்,காலை மாலை, வெயில் குளிர்,காய் கனி எல்லாம் முரண்பட்டவை. ஆயினும் ஒவ்வொன்றும் அழகே. பிறிதொன்றோடு ஒப்பிட இயலாத தனி தனி அழகும் சுவையுமுடையது அவைகள். பெரும்பாலும் புறக்கணிக்க இயலாத இன்றியமையாமை ஆகிவிடுகின்றன் அவைகள். அதி காலையும் அந்தி மாலையும் எப்பொழுதும் கிறக்கம் தரும் கவிதை ஊற்றுகளாகும். ஆழ யோசித்தால் அவை தம் தனி தன்மைகளே அவைகள் முரண் பட்டிருக்க காரணம் ஆகும். மனிதர்கள் மட்டும் விதி விலக்கல்லவே. ஆறாம் அறிவுடைய ஒரே காரணத்தால் மனிதன் கொண்ட முரண்கள் மோதல்கட்கு உட்படுத்தப் படுகின்றன்.
அது போலவே தான் fantastic 14 இல் உள்ள ஒவ்வொருவருமே. ஒவ்வொறுவரும் முரணே. இருப்பினும் பத்தாண்டு காலமாக எங்களை பிணைந்திருக்க செய்திருக்கின்றன சில பல அடிப்படை விசயங்கள். The BASICS. எவ்வளவு தான் உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்து ஆக முடியாதுனு சொல்லுவாங்க. நாங்க எல்லாம் ஊர்க்குருவியானாலும் சரி பருந்தானாலும் சரி நாங்க பறக்குறது தான் உயரம்னு சொல்றவங்க. இதை நீங்க confidence nu சொல்லலாம். இல்லை திமிர் பிடித்த தெனாவட்டுனும் சொல்லலாம். அதை தங்களின் எண்ணப் பிதற்றலுகளுக்கே விட்டு விடுகிறேன். நாங்க அதை “நாங்க எல்லாம் BASIC ஆவே” அப்படினு தான் சொல்லிக்குவோம். சில forward mails வரும். 50 facts about men னு குளிக்க மாட்டாங்க, துணியை துவைச்சு போட்டுக்க மாட்டாங்க அப்படி இப்படினு. ஆவைகள் பெரும்பாலும் கூடுதல் சுவைக்காக சற்றே exaggerate செய்யப்பட்டிருக்கும். ஆனால் இந்த facts about “எங்க Basic’s” எல்லாம் உண்மையே. உண்மையை தவிர வேறொன்றுமில்லை. இதை சொல்வதில் எனக்கு எந்த கவலையுமில்லை. Fantastic 14 ல இருக்க மத்தவங்க..hmm..அவங்கள பத்தி எனக்கு கவலை இல்லை. ஏன்னா நாங்க எல்லாம் BASIC ஆவே அப்படி தான்.
Disclaimer:
The following characteristic are very much the character of each and every guy of the fantastic 14.
1) நாங்க எல்லாருமே ரொம்ப understanding. ஆனால் பிரச்சனை என்னவென்றால் எங்களோட அந்த understanding eh யாருமே understand பண்ணுறதில்லை. With an incredible sense of understanding and when we move to the next step people obviously get a feeling that we never understood what we had crossed. And this fact does not apply to academics.
2) ஏதாவது மிக மிக தவிர்க்க முடியாத காரணத்துக்காக மட்டும் தான் காலையில் சில நேரங்களில் எழுந்திருப்போம். இது ஏற்கனவே சொன்னது தான். ஆனால் எழுந்துவிட்ட ஒரே காரணத்துக்காக கடமையைச் செய்து முடித்துவிட மாட்டோம். We have the knack of dismissing any pending duty to be silly just for the cause of sleeping. This very much applies to academics.
3) பொதுவாக மற்றவர் புண்படும்படியாக நாங்கள் பேசவோ , செயல்களில் ஈடுபடவோ மாட்டோம். ஆனால் நிறைய பேசுவோம், நிறைய செயல்களில் ஈடுபடுவோம். அவ்வகையில் மற்றவர் புண்படும்படியாக ஏதேனும் நிகழ்ந்துவிட்டால் பாவ மன்னிப்பு கேட்க கூட தயங்க மாட்டோம். பிரச்சனை என்னவென்றால் மற்றவர்கட்கு மேலும் புண்ணாகலாம். We don’t hurt until some one really comes to us and tell that he is really hurt. You know I was saying we highly understand.
4) வாத்தியார்களை நாங்க ரொம்ப மதிப்போம். ஆனால் அவங்க தான் எங்களை மதிக்கறதே இல்லை. ஆதலால் அவ்வை சொன்ன மாதிரி மதியாதார் தலைவாசல் மிதியாதே னு பின்பற்றுவோம். இதை புரிஞ்சிக்காம வாத்திகளும் I & U Grade களா குடுத்து தள்ளுங்க. அப்போதெல்லாம் வள்ளுவன் சொன்னதை போல இன்னா செய்தாரை ஒறுத்து விடுவோம். அந்த வகையில் எதிரிக்கும் நண்மை செய்யும் குணம் கொண்டோம்.
5) பெண்களை பிடிக்கும்.
6) வீண் சண்டைக்குப் போக மாட்டோம். வம்புச் சன்டைக்கும் போக மாட்டோம்.ஆனால் வம்பு பண்ணிகிட்டே இருப்போம்.
7) சினிமா பார்ப்போம். மற்றவர்கள் மாதிரி வெறும் மூன்று மணி நேர பொழுது போக்காக மட்டுமல்ல. சினிமாவில் பார்க்கும் character களை நிஜ மனிதர்களுக்கு superimpose பண்ணி இன்னும் நிறைய களி கொள்வோம். I will bet you will get life time entertainments this way. J.மத்தபடி சினிமா பார்த்து கற்றுகொண்ட விசயம் வாழ்க்கையை எங்கள் அளவு படிக்காத பல பேர் சினிமா எடுத்து torture பண்ணுறானுங்க.
8) களவும் கற்று மற . அந்த வாக்கின் பெரும்பகுதியை கடந்துவிட்டோம். இன்னும் “மற” மட்டுமே பாக்கி. But I should say here that whatever we learn we learn it to the roots.
9) காதல். என்ன சொல்ல?அது ஆணித்தரனமாக எங்கள் யாரிடமும் இல்லாததே காரணம் என்று நினைக்கிறேன் இந்த “நட்பின் பரிணாம வளர்ச்சிக்கு”
10) நகைச்சுவை உணர்வு கொஞம் அதிகம் எங்களுக்கு. எத்தகு நிகழ்வாயினும்
அதன் தாக்கம் சிறிது நேரமே தாக்குப்பிடிக்கும் எங்களிடம். பின் அவை நிச்சயமாக நகைச்சுவையாக்கப் பட்டுவிடும். This is a very contagious habit we possess.
இன்று காலம் எத்துனை மாற்றங்களை எங்களுக்குள் ஏற்படுத்தி இருந்தாலும் இப்படியாக எங்களுக்குனு ஒரு உலகம், அதுல நாங்க எல்லாம் ஒரு type ஆன villainy hero. நாங்க எல்லாம் ரொம்ப நல்லவங்க. அப்படிங்கிற கூட்டுக்குள் வாழ்வதையே விரும்பறோம். மேலும் பரிணாமம் தொடரும்.
1 comment:
fantastic & could remember the words from one of the senior: "life la nammakunu oru circle pottu, athukulla namma thaan hero...namma than villain...namma thaan ellam nu vaal(ntha)(ra) pasanga naama"...
Post a Comment