கையளவு மனசுக்குள் தான்
உண்மைகள் பலவும்
வையத்தளவு உணர்வுகளும்
உலகறிந்திடாது உறங்குகின்றன.
உண்மையி னிடத்து உணர்வுகளும்
உணர்வி னிடத்து உண்மைகளும்
ஊமை யாகிடாத உன்னத
உறவு நட்ப தாகும்.
ஊரும் உறவும் அறிவாய்
உயிர் கொடுத்த தாயால்
உன்னை நீ அறிவாய்
உளமது கொண்ட நட்பால்.
No comments:
Post a Comment