In this part which I would like to call “My Rhapsody” I am gonna try and translate a few English poems I had come across in my life. A few they are, being learnt mostly in school days. The translated and original versions may not cognate in each and every aspect, but sure will in its central theme. I would like to kick start this series with the poem of William Wordsworth.
by:William Wordsworth
I wandered lonely as a cloud
That floats on high o'er vales and hills,
When all at once I saw a crowd,
A host, of golden daffodils;
Beside the lake, beneath the trees,
Fluttering and dancing in the breeze.
Continuous as the stars that shine
And twinkle on the milky way,
They stretched in never-ending line
Along the margin of the bay:
Ten thousand saw I at a glance,
Tossing their heads in sprightly dance.
The waves beside them danced; but they
Out-did the sparkling waves in glee
A poet could not but be gay,
In such a jocund company
I gazed -- and gazed -- but little thought
What wealth the show to me had brought:
For oft, when on my couch I lie
In vacant or in pensive mood,
They flash upon that inward eye
Which is the bliss of solitude;
And then my heart with pleasure fills,
And dances with the daffodils.
இனி தமிழில்
பூக்களின் பாக்கள்
ஆக்கம்: நரேந்திர பிரபு, 03-05-2007
விண் உலா வரு
முகவரி யில்லா முகிற்போல
வீண் உலா வரு நான்,
குளக்கரை யோரமாய்
காற்றின் இசைக்கு அசையும்
கவிண் மலர் கூட்டம்
கண்டேன்; கவித் தேன்.
வான மங்கை முகத்து
வனப்பு கூட்டும்
விண்மீன் பருக்கள் கணக்காய்
வரிசையாய் வரையற்று,
பார்வை யொன்றில்
பத்தொள்ளாயிரம் கணக்காய்
பரவச நடன மாடும்
பூக்கள்; பாக்கள்.
சிங்கார சிரிப்பினில்
சற்றே சிதறடிக்கின்றன
சிற்றலைகளின் சினுங்கள் நடனங்களை,
பசித்திரு பித்தன் எனக்கு
பூத்திரு மலர் தரு
பரவச நட்பு;களிப்பு.
பல நாட்களில்
புவி துறந்து
பிணக்கமற்ற தனிமையிலே,
உள்மனதில் மகிழ்வின்
ஊற்றாய் விரியும்
உன்னத மலர்களின் ஆட்சி
தீரா தனிமையின் தாகத்திற்கு
தேவாமிர்தம் தரும் காட்சி ;
மனம் கொள்ளும் மாட்சி,
No comments:
Post a Comment