பார்வையாலே பாவையெவளையும் படிய வைக்கும் பாங்கு தனக்குண்டெணும் ஏற்றமிக்க எண்ணம் கொண்ட நண்பன் Lingesh. அவனுடனான ஓர் பயண அனுபத்திலிருந்து. (2003 new year trip chennai to vizag)..
பார்வை ஒன்றே போதுமா?
பெண்ணொருத்தி கண்ணசைத்தாள்
பார்வையாலே யாழிசைத்தாள்
விழியாலே வாவென்றாள்
விண்மீன் போல் ஜொலித்தாள்
ஆண்கள் சன்னமாய் செய்யும் பாவம்
அவர்தம் கொள்ளும் சல்லாபம்
சின்னதாய் நான் சிரித்திட
சந்திரனாய் அதையவள் திருப்பிட
பார்வையாலே பாலமிட்டோம்
சிரிப்பாலே சிருங்காரம் செய்தோம்
பார்வை பாலத்தில் காதல் கணைகளின் நெருக்கடி
எல்லாம் உன் பார்வை மூட்டிய நெருப்படி
குற்றங்கள் செய்ததெல்லாமுன் பொறுப்படி
கொஞ்சம் தவறினாலும்
உலகம் எனக்கு தருமே செருப்படி
வேண்டாமடி கள்ளி விளையாட்டு
காதலெனும் மாயப்பேயை நீயோட்டு
பார்வக் காதலெல்லாம் வெத்துவேட்டு.
Saturday, January 31, 2009
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
Sir
yaen sir neenga ippadi
naanga ennaiku sir antha maathiri solli irrukom
athuvum engalai maathiri bachelorsa otti paarkurathula appadi oru anandham ungaluku
nadakattum nadakkatum
sila visayangal yellam solli th erivathillai...actions speak fr itself...
Post a Comment