At the end of this scribbling (A combination of prose and poetry) i have signed off thus, Economics Class,25/10/2005.
And yes inspiration for this was a beautiful girl in my MBA class.
காதலால் கசிந்துருகி
கடமை மறக்கும் கயவனல்லன்
காமம் கண்மறைக்க
காட்டாறாய் மாறும் இளைஞனல்லன்
காதல் காமம் இவ்விரண்டையுமே
கவிபாடி கண்டு உண்டு
களியுறு கவிபெறு தலைவன்
நான்.
மனமது கணமாய் தோன்றும் சில நேரங்களில். இப்பொழுதெல்லாம் பல நேரங்களில்.அப்பொழுதெல்லாம் பேனா எடுத்து பிதற்ற தோன்றும். சோம்பேறியாய் வெட்டியாய் கழிப்பேன் பல நாட்களை. பிறிதொரு நாளில் அப்பேனாவை எடுத்து பிதற்ற இயாலாததாய் கிறுக்கல்கள் தொடங்கும். அங்கணம் தலை முதல் கால் வரை கவி புரண்டு ஓடுவதெல்லாம் காதலதை பற்றியே.இப்படியே காதலை பற்றி கிறுக்கி கொண்டிருக்கிறென் என வேறு உணர்வு கூற முயன்றால் அவ்வளவு புலன்மிகு கவிதைகள் முளைக்க மறுக்கின்றன். மறு கணமே மனம் காதல் தீயில் கறுக வார்த்தைகள் உண்மையாய் வந்து வீழ்கின்றன.எழுதுகிறேன்.அது காதலாகவே வருகிறது.
காணும் போதிலெலாம்
காந்தமாய் கவர்கிறாள்
கண்ணிற் கழகாய் வந்து
கனா கோடி கொடுக்கிறாள்
கவிபாடி துதிக்கா தூண்டுகிறாள்
காளைக்கும் தெரியும் நிச்சயம்
கிடைப்பதில்லை அவள்தனள்
கண்ணியமாய் அவன் கரையும் வரை.
கண்ணாமூச்சி வாழ்க்கை!
Saturday, January 31, 2009
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
machi...my limitation with tamil literature is stopping from appreciating it fully...
unfortunately there's no "tamil wordweb" for me to refer to ;-)
frankly you're a bit too much in all aspect :)
:)
Post a Comment