Saturday, March 7, 2009

அகர முதல ......

அகர முதல என்று எளிதில் ஆரம்பித்து எத்தனையோ விஷயங்கள் பற்றி எழுதிட ஆசை. இங்கு எல்லோரும் எல்லாம் பற்றியும் எழுதுகிறார்கள். ஒருவன் ஒரு விஷயம் பற்றிய உண்மைகளை அறிந்திட பெருந்தடையாக இருப்பது இன்றைய ஊடகங்கள். ஒரு சின்னஞ்சிரியனாய் சரோஜ் நாராயண் சுவாமி வாசித்த செய்திகளில் காட்டிய ஆர்வம் இப்போது கொள்ள முடிவதில்லை. தமிழ் ஊடகங்களில் நடுநிலைமை என்பது அறவே அற்று அராஜகங்களின் ஆணிவேர்கலாய் திகழ்கின்றன. குறிப்பாக தொலைக்காட்சி ஊடகங்கள். அவை ஒவ்வொன்றும் சர்வாதிக போக்குடன் செயல்படுகின்றன. ஒரு சிறிய சினிமா வரிசை நிகழ்ச்சியில் கூட அப்பட்டமாய் அநியாய அரசியல் கலக்கும் வல்லமை பெற்றவர்கள் இவர்கள். ஒரு ஒன்றுக்குமே ஆகாத விசயத்தில் கூட அரசியல் புகுத்தும் இவர்கள் சட்டக் கல்லூரி மோதல், வழக்கறிஞர் காவல்துறை கலவரம் போன்ற விவகாரங்களில் அள்ளி தெளிக்கும் அரசியல் அட்சரங்களில் உண்மைகள் வெகுவாக மறைந்துவிடுகின்றன. ஆங்கில ஊடகங்கள் இதனினும் கொடியவைகள். அவைகள் பிற நாட்டினரின் கைப்பாவைகள் என்று கூட சில நேரங்கில் தோன்றுவதுண்டு. ஒரு உதாரணம். NDTV இல் ஒரு நாள் "ஜனாதிபதி உரை ஆற்றுவார்" என்றொரு செய்தி இடு காண நேர்ந்தது. அன்றைய தினம் குடியரசு தினமும் அல்ல. பொறுத்திருந்து பார்த்தால் பாக்கிஸ்தானின் ஜனாதிபதி அவர் நாட்டு மக்களுக்கு உரை ஆற்றிக்கோண்டிருக்கிறார். என்ன ஒரு தேவுடியாத்தனம். ஊடகங்கள் பணம் போடும் முதலாளிகளின் சர்வாதிகார கூடாரங்கள். இவர்கள் கொடுங்கோல் ஆட்சி புரிபவரினும் கொடியர்.இன்று வலைப்பதிவர்கள் பலரும் கூட அவ்வண்ணமே. இந்த நாட்டின் இன்றைய மிக முக்கிய பிணிகளில் ஒன்றாய் ஊடகங்கள் இருப்பது தான் உண்மை அவலம்.

1 comment:

Suresh said...

very true machi - it's better to limit these sources only for entertainment...